Mature Relationship : பக்குவமடைந்த உறவின் முக்கிய அம்சங்கள்!

Mature Relationship
Mature Relationship
Spread the love

1.ஆரோக்கியமான உறவில் (Mature Relationship), தம்பதிகள் ஒருவரை ஒருவர் மதிப்புடன் நடத்துகின்றனர். எந்த இடத்திலும் ஒருபோதும் ஒருவரையொருவர் குறைத்துக்கொள்ள மாட்டார்கள்.

2.தம்பதிகள் நேர்மறையான உரையாடலில் மட்டுமே ஈடுபடுகிறார்கள். எந்த விஷயத்திலும் சுயநலமாக முடிவு செய்யாமல், ஒருவரின் கருத்துகளை மற்றொருவர் பொறுமையாக கேட்கிறார்கள்.

3.இருவரும் ஒருவருக்கொருவர் நம்பகமானவர்களாக இருப்பார்கள். தங்களின் துணைக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவார்கள். உறவில் எந்த ரகசியங்களையும் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

4.கனவுகள் மற்றும் இலக்குகளை நிறைவேற்றுவதில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக நிற்பார்கள்.

5.ஒருவருக்கொருவர் ஊக்குவித்தும் சாதனைகளை பாராட்டி கொண்டாடியும், தேவைப்படும் நேரங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் இருப்பர்.

இதையும் படிங்க : மலைக்கோட்டை வாலிபன் : மோகன்லால் படம் படுதோல்வி!!

6.ஒருவேளை மூன்றாம் நபர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் தம்பதிகள் தங்கள் வாதங்களை பெரிதுபடுத்த முயற்சிக்க மாட்டார்கள்.

7.மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் அமைதியாக பதிலளிப்பார்கள். பிரச்சனைக்கு தீர்வு என்ன என்பதை கண்டறிய முயற்சிப்பார்கள்.

8.அதுமட்டுமல்லாமல், தங்கள் தனிப்பட்ட உறவு சம்மந்தமான விஷயங்களை மூன்றாம் நபர்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். தங்களுக்குளேயே பேசி சரிசெய்ய முயல்வார்கள்.

9.ஒருவருக்கொருவர் துணையின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் ஆசைகளை மதித்து செயல்படுவார்கள்.

10.தங்கள் துணை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதைப் பார்த்து அவர்கள் கோபப்படுவதில்லை. அதே சமயம் இருவருமே ஒருவருக்கொருவர் மற்றவர்களிடம் செலவிடும் நேரத்தை விட தங்களுக்குள் அதிகமான நேரத்தை செலவிடுகிறார்கள்.

இதையும் படிங்க : பெரும் வரவேற்புடன் வெற்றிநடைபோடுகிறது வடக்குப்பட்டி ராமசாமி!

11.தம்பதிகளுக்குள் காதல் கலந்த உடல் நெருக்கமும் ஆரோக்கியமான உறவுக்கு மிக முக்கிய தேவை என்பதை புரிந்து செயல்படுவார்கள். இருவருமே தங்கள் உணர்ச்சி மற்றும் உடல் தேவைகளைப் பற்றி அக்கறை கொண்டிருப்பார்கள்.

12.ஒரு நேர்மறையான உறவில், தம்பதிகள் தங்கள் துணையின் குடும்பத்தினரையும், நண்பர்களையும் விமர்சிப்பதை தவிர்க்கிறார்கள்.

13.ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய நாள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டு, அடுத்த நாளை இன்னும் சிறப்பாக மாற்ற தேவையானவற்றை பற்றிய புரிதலோடு துவங்குவார்கள்.

14.பணி நிமித்தமாக பிரிந்திருக்க வேண்டும் என்ற சூழல் வந்தாலும், ஆண் பெண் இருவருமே நிலைமையை புரிந்து கொண்டு காத்திருக்க தயாரான மனநிலையை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

15.தங்கள் துணை எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும் அதில் இருந்து திருந்தி வெளிவர அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிப்பார்கள் (Mature Relationship).


Spread the love
Related Posts