புதுச்சேரியில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்தவாரம் முதல் ரூ.5,000 நிவாரணம் வழங்கப்பட உள்ளது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மாதம் தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகள் எங்கும் வெள்ளக்காடாக மாறியது.
மேலும் புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டதால் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகபாதிக்கப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்தவாரம் முதல் ரூ.5,000 நிவாரணம் வழங்கப்பட உள்ளது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது எனவும், புதுச்சேரி மக்களுக்கான திட்டங்கள், வாக்குறுதிகள் அனைத்தும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.