மழை, வெள்ள நிவாரணமாக மத்திய அரசு இதுவரை (Relief Fund) ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார் .
கடந்த 50 நாட்களுக்கு முன் வின்பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்ற நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் மின்சார கார் மற்றும் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சில்லாநத்தம் சிப்காட் தொழிற்பூங்காவில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த மாபெரும் தொழிற்சாலையை அமைப்பதற்கான (Relief Fund) அடிக்கல் நாட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது .
இதையடுத்து மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழவியில் , சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பி., எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :
மழை, வெள்ள நிவாரணமாக மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை. மத்திய அரசு வழங்காவிட்டாலும் தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது.
நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற பிறகு, மாவட்டந் தோறும் லட்சக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றோம். தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், பெரிய நிறுவனங்களை கொண்டு வருகிறோம்.
Also Read : https://itamiltv.com/honor-killing-youth-massacre-in-chennai/
இந்த நிறுவனங்களின் மூலம் ஏரளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் இன்னும் என்ன னால திட்டங்களை கொண்டு வரலாம் என்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் வருகிறோம்.
முதற்கட்டமாக ரூ.4,000 கோடி முதலீட்டில் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஆலை அமைகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.