Site icon ITamilTv

Murugan Song | ”அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்..”தினமும் கேட்க வேண்டிய முருகன் பாடல்!

Murugan Song

Murugan Song

Spread the love

Murugan Song | ‘முருகா’ என்று நீங்கள் ஒருமுறை சொல்கிற பொழுது, முருகனோடு மும்மூர்த்திகளும் அருள் வழங்க வருவார்கள்.

‘மு’ என்றால் ‘முகுந்தன்’ என்று அழைக்கப்படும் திருமாலைக் குறிக்கும். ‘ரு’ என்றால் ‘ருத்ரன்’ என்றழைக்கப்படும் சிவனைக் குறிக்கும்.

‘க’ என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலனான பிரம்மாவைக் குறிக்கும். மும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துக்களை இணைத்தால் ‘முருக’ என்று வருவதால்,

முருகனைக் கும்பிட்டால் மும் மூர்த்திகளின் அருளும் முருகன் மூலமாக நமக்கு வந்து சேரும் எனபது ஐதீகம்.

அப்படி முருகபெருமானின் சிறப்பினை வர்ணித்து கூறப்படும் பாடலை கேட்டு வாழ்வில் வளமும், நலமும் பெற்று பெறுவாழ்வு வாழ்வோம் .

பாடலின் தொகுப்பு பின்வருமாறு:

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்
அப்பன் பழனியப்பன் – தினம்
அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்
அப்பன் பழனியப்பன்

கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம்
காவலில் நின்றிருப்பான் – அங்கு
கால்நடை யாய்வரும் மானிட ஜாதியைக்
கண்டுகளித்திருப்பான்.

துள்ளிவரும் வடிவேலுக்கு மேலொரு
ஜோதிப் பிழம்புமுண்டோ? – அந்த
சுப்பையன் போலொரு அற்புத தெய்வத்தை
சொல்ல மொழியுமுண்டோ!

இதையும் படிங்க: தை அமாவாசை 2024 : யாரெல்லாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.. நேரம்?

வெள்ளிமுகம் பனிரெண்டையும் கண்டபின்
வேறொரு சொர்க்கமுண்டோ? – ஆண்டி
வேஷத்திலாயினும் வீரத்திலாயினும்
வேலனை வெல்வதுண்டோ!

சித்தர் வணங்கிய சேவற் கொடியோனைச்
சேர்ந்து வணங்கிடுவோம் – அந்த
சிக்கலிலாயினும் செந்திலிலாயினும்
சென்று கனிந்து நிற்போம்!

பக்தருக்கென்று திறந்திருக்கும் தென்
பழனியைக் கண்டுகொள்வோம் – அங்கு
பாலாபிஷேகமும் தேனாபிஷேகமும்
செய்து பணிந்திடுவோம்!

செட்டி முருகன் எனும் பெயர்பெற்றவன்
தண்டாயுத மல்லவோ – அந்த
சித்திர வள்ளியும் சாடையில் மற்றொரு
செட்டி மகளல்லவோ!

கொட்டிக் கொடுப்பவன் கோவிலைப் பார்த்திட
கோஷ மிட்டோடிடுவோம் – முள்ளும்
குத்தட்டுமே கல்லும் தட்டட்டுமே வலி
கொஞ்சமும் கண்டுகொள்ளோம்!

இதையும் படிங்க: திருப்பதி கோவிலின் January மாத காணிக்கை

ஆறும் அறுபதும் ஆனஇருபதும்
ஆடிநடந்து செல்வோம்-சில
ஆனந்தப் பாடல்கள் வேலனைப் பாடட்டும்
அன்புடன் ஊர்ந்து செல்வோம்!

ஊறுகள் நேரட்டும் உமையவள் மைந்தனை
உச்சத்தில் வைத்திருப்போம் – கையில்
உள்ளதை அன்னவன் கோவிலுக்கே தந்து
மிச்சத்தில் வாழ்ந்திருப் போம்!

வேலன் குமரன் முருகன் திருச்செந்தில்
வேட்டுவன் கந்தனுக்கு – இரு
கால்கள் நடக்கின்ற நடையினில் தானுயர்
கனிவு நிறைந்திருக்கு!

காலம் வழிவிடும் கச்சிதமாய் சென்று
கால்களிலே விழுவோம் – அவன்
கால்களிலே விழக்கால்கள் நடக்கட்டும்
காவிரிபோல் வளர்வோம்!

இந்த பாடலை (Murugan Song) தினமும் பாடலாம். சஷ்டி விரதம் தினங்களில் பாடுவது மேலும் விசேஷமானது.


Spread the love
Exit mobile version