சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் ரகுபதியை , மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி இன்று சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார் .
இந்த சந்திப்பின் போது தமிழக சிறைகளில் ரமலான் நோன்பு கடைப்பிடிக்கும் கைதிகளின் மத சடங்குகள் சிரமமின்றி மேற்கொள்வது குறித்தும் சிறைவாசிகளின் குடும்பத்தினர் தெரிவித்த கருத்துகளையும் அமைச்சர் ரகுபதியிடம் எடுத்துரைத்தார்.
Also Read : மொரிஷியஸ் நாட்டில் ஆன்மீக பயிற்சி அளித்து சிறப்புரையாற்றிய மஹாவிஷ்ணு..!!
மேலும் நீண்ட கால ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை குறித்தும் ஆளுநர் திருப்பி அனுப்பிய பட்டியலில் உள்ளவர்களுக்கு, சட்டப்படி அடுத்த கட்டமாக என்ன செய்ய முடியும் என்பது குறித்து உரிய கவனம் எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
அதுபோல் தென் மாவட்டங்களில் சாதி கலவர வழக்குகளில் நீண்ட கால சிறைவாசிகளாக இருப்பவர்களின் விடுதலை குறித்தும் கவனம் எடுக்குமாறு தமிமுன் அன்சாரி கேட்டுக் கொண்டார்.
இச்சந்திப்பின் போது மாநில துணை செயலாளர்கள் அரிமா. அசாருதீன் மற்றும் தாம்பரம் தாரிக், இளைஞரணி மாநில பொருளாளர் ஜியாவுல் ஹக் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.