வேதாரண்யம் அருகே அண்ணன்,தங்கை இருவரும் ஒரே ஆண்டில் மருத்துவர்கள்ஆகி தாயின் கனவை நினைவாக்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு கிராமத்தில் சேர்ந்த வீராசாமி, ராணி தம்பதியரின் மகன் ஸ்ரீபரன், மகள் சுபஸ்ரீ அண்ணன் ,தங்கை இருவரும் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி ஒரே ஆண்டில் தேர்வு பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்ந்து உள்ளனர்.
பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள வீராசாமி விவசாய கூலி வேலை பார்த்து வந்தார். மூட்டை தூக்கும் தொழில் செய்யும் போது விபத்து ஏற்பட்டு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டிலேயே முடங்கி உள்ளார்.இவரது மனைவி ராணி அதன் பிறகு தையல் வேலை மற்றும் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
மகன் ,மகள் மருத்துவராக வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே ஆசைப்பட்டதால் ஏழ்மை நிலையை மறந்து இருவரையும் மருத்துவராக்க தாய் ராணி முடிசெய்து.இரவு பகல் வீட்டில் உள்ள தையல் இயந்தித்தல் மின் மோட்டாரை கூட சரி செய்ய முடியாத நிலையில் காலால் மிதித்து அதில் வரும் சிறு வருமானத்திலும் மூன்றுஆடுகள் வளர்த்தும்பிள்ளைகளுக்கு படிப்புக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து பிள்ளைகளை படிக்க வைத்தார்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியிலும் பின்பு தேத்தாகுடி தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று உள்ளனர்.பின்பு ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுபஸ்ரீ யும் ,
பட்டுகோட்டை தனியார் பள்ளியில் ஸ்ரீ பரனும் படித்து உள்ளனர் .ஸ்ரீபரன் நீட் தேர்வில் 438 மதிப்பெண்னும், சுபஸ்ரீ 319 மதிப்பெண்ணும் பெற்று உள்ளனர்.
இதில் சுபஸ்ரீ 7.5 சதவீதம் இட ஒதுக்கிட்டில் மூலம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஸ்ரீபரன் கன்னியாகுமாரியிலும் உள்ள அரசு மருத்துவ கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
ஆடு வளர்ப்பிலும் தையல் தொழிலும் செய்து பிள்ளைகளை மருத்துவர்களாகிய இந்த பெற்றோர்களை அப்பகுதி மக்களும் பள்ளி ஆசிரியர்களும் நேரில் வந்து வீட்டில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வசதி படைத்தவர்கள் குழந்தைகளுக்கு என தனி அறை ஒதுக்கி அதில் அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தும் பல மாணவர்களால் நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியாத நிலையில் , கிராமத்தில் கூரை வீட்டில் மழை வீட்டுக்குள் ஊற்றும் நிலையில் அதில் படித்து இரண்டு மாணவர்களும் ஒரே ஆண்டில் மருத்துவ படிப்பில் சேர்ந்தது அனைவராலும் பாராட்டுக்குரியது.