Site icon ITamilTv

“மீண்டும் மீண்டும் அரங்கேறும் ஹிந்தி திணிப்பு…ட்விட்டரில் கண்டனம் தெரிவித்த அமைச்சர் உதயநிதி”

Spread the love

ஊழியர்களுக்கு நீண்டதொரு இந்தித்திணிப்பு பட்டியலை சுற்றறிக்கை என்ற பெயரில் நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் உதயநிதி கூறியதாவது :

இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் – இந்தி புத்தகங்களை வாங்க வேண்டும் – இந்தி திறனறிய சோதனை நடத்த வேண்டும்” என நீண்டதொரு இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் நியு இந்தியா அஷ்யூரன்ஸ் வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உதட்டளவில் தமிழ் – தமிழர் என ஏமாற்றுவது. செயல் என்று வரும்போது இந்தியை திணிப்பது என்ற ஒன்றிய அரசின் இரட்டை நிலைப்பாடையும், ஆதிக்க இந்தியையும் தமிழ்நாடும் – தி.மு.கழகமும் ஒருபோதும் அனுமதிக்காது.

ஊழியர்களுக்கு அனுப்பிய தனது இந்தித்திணிப்பு சுற்றறிக்கையை நியு இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் உடனே திரும்பப்பெற வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version