வயநாடு அருகே ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்நது 6வது நாளாக நீடித்து வரும் நிலையில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 365 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு அருகே கடந்த மாதம் 30ம் தேதி அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் அப்பகுதியில் உள்ள 6 கிராமங்கள் தடம் தெரியாமல் காணாமல் போனது .
Also Read : இந்தியாவிலேயே முதல்முறை : சென்னையில் வியக்க வைக்கும் டபுள் டெக்கர் மெட்ரோ பாலம்..!!
கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் அங்கிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 1000 கணக்கான மக்கள் மண்ணுக்குள் புதைந்தும் பலர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது .
கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்ப்பட்ட இந்த துயர சம்பவத்தில் சிக்கியவர்களை மீட்க உடனடியாக ராணுவம், தேசிய பேரிட மீட்பு படையினர், கேரள மீட்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், தன்னார்வலர்கள் என பலர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று 6 ஆவது நாளாக மீப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுமட்டுமின்றி இந்த பேரிடர் சம்பத்தில் சிக்கி இருதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .