Site icon ITamilTv

Reserve Bank : மார்ச் 31 வங்கிகளுக்கு அதிரடி உத்தரவு! என்னவா இருக்கும்?

Reserve Bank

Spread the love

Reserve Bank : நடப்பு நிதியாண்டு 2024-ன் கடைசி நாளான வருகிற மார்ச் 31-ஆம் தேதி வங்கிகள் செயல்படுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி, 2023-2024 ம் நிதியாண்டில் கடைசி நாளான மார்ச் 31ம் தேதி அன்று ரிசர்வ் வங்கியின் ஏஜென்சி வங்கிகள் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பொதுத் துறை வங்கிகளின் அனைத்து கிளைகளும் மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று செயல்பட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் – புதிய முகங்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு!!!

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி Reserve Bank சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

“அரசு தொடர்பான வணிகத்தைக் கையாளும் அனைத்து ஏஜென்சி வங்கிகளும் அதன் கிளைகளை ஞாயிற்றுக் கிழமையான மார்ச் 31ம் தேதி திறந்து வைக்க வேண்டும்.

2023-2024ம் நிதியாண்டு தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளும் கணக்கில் வைக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்காத ஆளுநர் – உச்ச நீதிமன்றத்தில் இன்று மனுமீது விசாரணை!!

நடப்பு நிதியாண்டின் இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 31ம் தேதி, வங்கிச் சேவைகள் முழுமையாக கிடைக்கும் எனும் தகவலை பொதுமக்களுக்கும்,

வாடிக்கையாளர்களுக்கும் உரிய விளம்பரங்கள் மூலம் தெரியப்படுத்தவும் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

இதையும் படிங்க : திமுக எம்.பிக்கள் 7 பேருக்கு கல்தா – இதுதான் காரணம்!!


Spread the love
Exit mobile version