பண்டிகை காலத்தில் கூட்டம் கூடி ஒமிக்ரான் பரவுவதை தடுக்க உள்ளூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
புதிய வகை கொரோனாவான ஒமிக்ரான், அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த ஒமைக்ரான் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளதோடு பல்வேறு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் இதுவரை புதிய வகை கொரோனாவான ஒமைக்ரானின் மொத்த பாதிப்புகள் 450 ஐ தாண்டியுள்ள நிலையில், பண்டிகை காலத்தில் கூட்டம்கூடி ஒமிக்ரான் பரவுவதை தடுக்க உள்ளூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.
இது குறித்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதிய கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார். அதில் ஒமைக்ரான் பரவினால் மாவட்ட, மாநில அளவில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கலாம் என்றும் கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுகள் பரிசீலனை செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சுகாதார அமைச்சகத்தின் ஆலோசனைகளை ஜனவரி 31ம் தேதி வரை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.