புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சில கட்டுப்பாடுகளையும் விதித்து சென்னை மாநகரக் காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகரக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
புத்தாண்டை ஒட்டி சென்னையில் 19,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு உதவியாக 1,500 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Also Read : கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த சதீஷுக்கு மரண தண்டனை..!!
நாளை (டிச.31) இரவு 9 மணியிலிருந்து 425 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ள ஏற்பாடு.
பெண்களின் பாதுகாப்புக்காக 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்ல ஏற்பாடு.
பைக் ரேஸ் நடக்காமல் தடுக்க 30 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு. டிச.31 மாலை முதல் ஜன.1 வரை கடலில் குளிக்கவோ, இறங்கவோ அனுமதி மறுப்பு என காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.