உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுக்கு மேல் செயல்பட்டு வந்த குதிரை பந்தய மைதானத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
சுமார் 822 கோடி குத்தகை பாக்கியை மைதானத்தை சார்ந்தவர்கள் செலுத்தாததை அடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குத்தகை காலம் 1978 உடன் முடிந்த நிலையில் அதன்பிறகு குத்தகை தொகையை செலுத்தாமல் மைதானம் இயங்கி வந்துள்ளது. இதையடுத்து அரசு தரப்பில் நோட்டீஸ் அளித்தும் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகை பாக்கியை செலுத்தாததை அடுத்து கடந்த 2006 ஆம் ஆண்டு வருவாய்த்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
Also Read : முன்னாள் அமைச்சர் மீதான நில மோசடி வழக்கு – கரூரில் சிபிசிஐடி சோதனை..!!
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு குதிரை பந்தய மைதானத்தை மீட்க உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்ந்து நீண்டுகொண்டே சென்ற நிலையில் உதகை கோட்டாட்சியர் மகாராஜா தலைமையில் அதிகாரிகள் 52.4 ஏக்கர் பரப்பளவு கொண்ட குதிரை பந்தய மைதானத்தை மீட்டுள்ளனர் .