robbery at gun point : துப்பாக்கி முனையில் கொள்ளை – பணியாளரை கட்டிப் போட்டு கைவரிசை!

robbery-at-gun-point-in-chennai-thiruvanmiyur-railway-station
robbery at gun point in chennai thiruvanmiyur railway station

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டர் பணியாளர்களை துப்பாக்கி முனையில் கட்டிப் போட்டு ரூ1 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் துப்பாக்கி கலாசாரமும் மீண்டும் தலையெடுக்க தொடங்கி இருக்கிறது.
திண்டுக்கல்லில் நேற்று இரவு நாட்டு துப்பாக்கியால் ராகேஷ் என்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.  இதில் ராகேஷ் பரிதாபமாக உயிரிழந் நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை 5 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில் தலைநகர் சென்னையில் திருவான்மியூரில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்ட்டருக்குள் நுழைந்த மர்ம நபர்கள், துப்பாக்கி முனையில் ஊழியரைக் கட்டிப் போட்டு அங்கிருந்த ரூ1 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

robbery-at-gun-point-in-chennai-thiruvanmiyur-railway-station
robbery at gun point in chennai thiruvanmiyur railway station

தலைநகர் சென்னையில் திருவான்மியூரில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Total
0
Shares
Related Posts