டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா ஓய்வு பெற உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் தற்போது இதுகுறித்து அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியதாவது :
டெஸ்ட் போட்டிகளில் இருந்து நான் ஒய்வு பெறப்போவதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. AUSக்கு எதிரான 5வது போட்டியில் இருந்து மட்டுமே விலகியுள்ளேன்.
Also Read : இந்தியாவுல இல்ல ஆசியாவிலேயே பெங்களூரு தான் டாப் – எதுல தெரியுமா..?
நான் பேட்டிங்கில் தொடர்ந்து ரன் எடுக்காததால் இறுதி டெஸ்ட் போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என எனக்கு தோன்றியது. எங்களுக்கு இது முக்கியமான போட்டி என்பதால் அணிக்கு என்ன தேவை என்பதுதான் எனது முன்னுரிமையாக இருந்தது.
மைக், லேப்டாப் அல்லது பேனா வைத்திருக்கும் யாரோ ஒருவர் சொல்வது உங்கள் வாழ்க்கையை மாற்றாது. இந்த விளையாட்டை நாங்கள் நீண்ட காலமாக விளையாடி வருகிறோம். எப்பொழுது செல்ல வேண்டும், எப்பொழுது விளையாட கூடாது, எப்பொழுது Dugout-ல் உட்கார வேண்டும், எப்பொழுது கேப்டன்சி செய்ய வேண்டும் என்பதை இவர்கள் தீர்மானிக்க முடியாது. நான் அனுபவம் உள்ளவன், இரு குழந்தைகளின் தந்தை, என் வாழ்க்கையில் என்ன வேண்டும் என்பது எனக்கு தெரியும் என கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.