பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 18 பேர் கைதாகியுள்ள நிலையில் தற்போது ரவுடி நாகேந்திரனின் மகனும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமன் தனிப்படை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5 ஆம் தேதி அவர் புதிதாக கட்டி வந்த வீட்டின் முன் மர்மநபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .
தமிழகத்தை உலுக்கிய இந்த கொடூர கொலை வழக்கில் 18க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் போலீசின் பிடியில் இருந்து தப்பித்தபோது என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டார்.
Also Read : கலைஞர் நினைவு தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது..!!
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏராளமான வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கறிஞர் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல ரவுடி நாகேந்திரனின் மகனும், வழக்கறிஞருமான அஸ்வத்தாமனிடம் 2 நாட்களாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட அருள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கறிஞர் அஸ்வத்தாமனிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில் கைதியை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது .