2024 டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ள இந்திய அணிக்கு BCCI மாபெரும் பரிசு தொகையை அறிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் 1 மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற 2024 டி20 உலக கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்று லீக் , சூப்பர் 8 மற்றும் அரையிறுதி என ஒவ்வரு அணியாக வெளியாகி நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதியில் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில் அபாரமாக ஆடிய இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன் 17 வருடங்களுக்கு பின் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது.
Also Read : நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்..!!
இந்நிலையில் இந்திய அணி பெற்ற இந்த வெற்றியை ஒட்டுமொத்த நாடே கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார் .
இந்த 125 கோடி பரிசு தொகை இந்திய அணியின் வீரர்கள் மற்றும் அணியில் பின்புறத்தில் இருந்து உழைத்த அனைவருக்கும் சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.