வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு திருப்பதியில் தரிசனத்துக்காக டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரும்பாலான பக்தர்கள் தினம் தோறும் திரளாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக விசேஷ நாட்களில் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே காணாமப்படும் இதன்காரணமாக பக்தர்கள் மணிக்கணக்கில் நின்று சாமி தரிசனம் செய்வர்.
Also Read : பொங்கல் பரிசுத் தொகுப்பில் ₹1000 ஏன் இல்லை? – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்..!!
இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இலவச தரிசன டோக்கன் பெற குவிந்த பக்தர்கள்; ஒருவரை ஒருவர் முந்தி செல்லும் போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்துள்ளனர் .
கீழே விழுந்தவர்கள் மேலே எழுவதற்குள் அவர்கள் மீது மற்றவர்கள் ஏறி நடந்து சென்றதாக கூறப்படுகிறது கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலால் ஏற்பட்ட இந்த விபத்தில் சேலம், பொள்ளாச்சியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.