7 crore scattered on the road : ஆந்திர மாநிலத்தில், லாரி – மினி வேண் மோதிய விபத்தில் வேனில் இருந்து கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நல்லஜார்லா அருகே லாரியும், மினிவேனும் மோதி பெரும் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் போது மினிவேனில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறின.

இதனை பார்த்த அந்த வழியாக சென்று கொண்டிருந்த பிற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் உடனடியாக இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மினி வேனை சோதனையிட்டபோது அதில், 7 மூட்டைகளில் கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.
அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் இதுகுறித்து தேர்தல் தணிக்கை குழுவுக்கு தகவல் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் உரிய ஆவணங்களின்றி அந்த பணம் எடுத்துச் செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. அதையடுத்து மினி வேனில் வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த மூட்டைகளில் இருந்த ரூ.7 கோடி பணம் ஐதராபாத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது (7 crore scattered on the road).
நாளை மறுநாள் ஆந்திராவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விபத்தில் சிக்கிய மினி வேனில் இருந்து கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் சாலையில் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.