தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை

rural local elections public holiday notice for 9 districts

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாமல் இருந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் வரும் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகின்றன.

rural-local-elections-public-holiday-notice-for-9-districts
rural local elections public holiday notice for 9 districts

அதன் படி ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினர் பதவிகளுக்காக தேர்தல் நடைபெறுகிறது.
இதையடுத்து, தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் வாக்குப்பதிவு தினத்தன்று பொது விடுமுறை அளிக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை செயலர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் 9 மாவட்டங்களில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் இதர 28 மாவட்டங்களில் நடக்க இருக்கும் தற்செயல் தேர்தல் நடைப்பெறும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதியில் பொது விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் காரணமாக 6 மற்றும் 9ம் தேதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, வேலூர், ராணிப்பேட்டை. திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் நான்கு நாட்கள் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts