2021-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது – பெயர் பட்டியலில் தமிழக பெண்

மத்திய அரசு 2021-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 20 மொழிகளில் உள்ள படைப்பாளிகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படவுள்ளது.

இதில் தமிழகத்தை சேர்ந்த சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு அவர் எழுதிய ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்படவுள்ளது. விருதுடன் ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலை எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது.

தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவரான அம்பை 1960- ஆம் ஆண்டில் இருந்து எழுதி வருகிறார். வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை, சக்கர நாற்காலி, பயணப்படாத பாதைகள் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.

சாகித்ய அகாடமி விருது கிடைத்தது குறித்து எழுத்தாளர் அம்பை கூறுகையில், “சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வாசிப்பு எண்ணிக்கை குறைவு என்பதை விட வாசிப்பு முறை மாறியுள்ளது” என்றார்.

அதேபோல், ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ சிறுகதை தொகுப்பிற்காக மு.முருகேஷுக்கு பால புரஸ்கார் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள எழுத்தாளர்களை கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Total
0
Shares
Related Posts