சேலம் மாவட்டம் ஆத்தூரில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் மீது வழக்குப் பதிவு செய்ய டிஜிபி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்,
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அமிர்தா சேகோ நிறுவனத்தின் உரிமையாளர் குழந்தைவேலு. இவரின் மனைவி ஹேமா. தம்பதிகளுக்கு சக்திவேல் என்ற மகனும், மகளும் இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். குழந்தை வேலுவின் மகன் சக்திவேல் பி.டெக் & எம்.பி.ஏ படித்துவிட்டு தந்தையின் தொழிற்சாலைகளை கவனித்து வந்துள்ளார்.
இவர்களுக்கு சொந்தமாக ஆத்தூரில் தொழிற்சாலை, பெரம்பலூரில் மார்டன் ரைஸ் மில் ஆகியவை உள்ளன. கடந்த 5 ஆண்டுகளாக ஆத்தூரில் செயல்பட்டு வரும் தொழிற்சாலையை சக்திவேல் தனியே கவனித்து வந்துள்ளார். தொழிலில் ஏற்பட்ட கடன் காரணமாக, கடனை அடைக்க அடிக்கடி சக்திவேல் வெளியில் தொகை வாங்கி இருக்கிறார். இந்த விவகாரம் குழந்தை வேலுவுக்கு தெரியவரவே, அவர் தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை நிலவி இருக்கிறது.
ஒருகட்டத்தில் ஆத்தூர் தொழிற்சாலையில் அதிக கடன் ஏற்பட, குழந்தை வேலு அதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க இயலாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இதற்கிடையில் சக்திவேல் ரைஸ் மில்லை தன்வசப்படுத்த முயற்சிக்க, அதில் குழந்தை வேலுக்கு 50 விழுக்காடு பங்கு, அவரின் மாமனார் சுந்தந்திரத்திற்கு உரிய பங்கு இருந்துள்ளது. இதனால் வங்கிக்கணக்கு உட்பட அனைத்து விஷயத்திலும் குழந்தை வேலுவின் பெயரே இருந்துள்ளது. இந்த விஷயம் சக்திவேலுக்கு அதிருப்தியை ஏற்படுத்திள்ளது.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் தற்கொலை முயற்சி! பரபரப்பு சம்பவம்!
இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் இருக்கும் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த குழந்தை வேலுவை, சக்திவேல் ஆத்திரத்தில் குத்துசண்டை வீரர் போல பாய்ந்து கடுமையாக தாக்கினார். அவரை குடும்பத்தினர் மற்றும் வேலையாட்கள் தடுக்க முயற்சித்தும் பலனில்லாதது தந்தைக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த குழந்தைவேலு உடனடியாக திருச்சி அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். அவரின் உடலில் காயங்கள் இருந்ததால் கைகளத்தூர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட, காவல் உதவி ஆய்வாளர் பழனிச்சாமி விசாரணை நடத்தினார். அச்சமயம் தந்தை – மகன் இடையேயான பிரச்சனையை பேசித்தீர்ப்பதாக எழுதி கொடுத்துள்ளனர். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய குழந்தை வேலு, இரண்டே நாட்களில் விஷம் குடித்து தற்கொலை செய்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அவரின் உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் வாகனமும் செய்யப்பட்டது. இதற்கிடையில், நேற்று சக்திவேல் தனது தந்தையை கடுமையாக தாக்கிய அதிரவைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதனையடுத்து, உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில், கைகளத்தூர் காவல் துறையினர் சக்திவேல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.