ITamilTv

“சினிமாவில் இருந்து விலகும் சமந்தா..?” அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Spread the love

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா.தமிழ் ,தெலுங்கு என பல மொழிகளில் மிகவும் பிஸியாக நடித்து வந்த இவர் கடந்த வருடம் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

ஒருபக்கம் நோய் மறுபக்கம் தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் இவை இரண்டுக்கும் நடுவில் கமிட்டான படங்களில் நேர்பட நடித்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் சமந்தா .

மயோசிடிஸ் நோய்க்காக தீவிர சிகிச்சை பெற்று ஓரளவு குணமாகி உள்ள சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டா உடன் கைகோர்த்து குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பில் உருவாகி வரும் Citadel என்ற ஆக்சன் தொடரின் ஷூட்டிங்கும் விரைவில் முடிவுக்கு வர உள்ளது .

இந்நிலையில் தற்போது தான் கமிட்டான அனைத்து ப்ராஜெக்ட்களை முடித்த பின் நடிகை சமந்தா சினிமாவில் இருந்து ஒரு வருடம் பிரேக் எடுக்க உள்ளதாக ஷாக்கிங் தகவல் இன்று வெளியாகி உள்ளது.

இதனால் சில காலமாக எந்த ஒரு ப்ராஜெக்ட்டிலும் சமந்தா கமிட்டாகவில்லை என்றும் சற்று கடினமான கதைக்களங்கள் கொண்ட படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு வாங்கிய அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது .

மேலும் ஒரு வருடம் பிரேக் எடுக்கும் நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய்க்காக வெளிநாடுகளில் சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . ஆனால் இதுகுறித்து நடிகை சமந்தா தற்போது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .


Spread the love
Exit mobile version