“பருத்திவீரன்” தொடர்பாகவும், அமீரின் திரைப்பயணம் தொடர்பாகவும், ஞானவேல்ராஜா கூறிய கருத்துகளில் ஒன்றில் கூட உண்மையில்லை. அனைத்தும், புனையப்பட்ட பொய்கள் இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சசிகுமார் ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது சசிகுமாரும் அவரது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் சமுத்திரகனி விடுத்துள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது :
அமீர் அண்ணன பத்தி நீங்க பேசுன வீடியோவ இப்பதான் பார்த்தேன்…!
ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டிருக்கிங்க ப்ரோ..! தப்பு தப்பா பேசிருக்கீங்க.! கேக்குறதுக்கே ரொம்ப கஷ்டமா இருந்துச்சு…ஏன் சொல்றேன்னா… அந்த படத்துல ஆரம்பத்துல இருந்து கடைசிவரைக்கும் இருந்தவன் நான்..எல்லா பிரச்னையும் எனக்கு தெரியும்.
ஆறு மாசம் “பருத்திவீரன் படப்பிடிப்பிலே இருந்துருக்கேன்…ஆனா உங்கள ஒருநாள் கூட அங்க பாத்தது இல்ல. நான்தான் தயாரிப்பாளர்,நான்தான் தயாரிப்பாளர் னு பேசிக்கிட்டே இருக்கிறீங்க. உங்கள் தயாரிப்பாளர் ஆக்கினது, கார்த்தியை ஹீரோ ஆக்கினது அந்த மனுஷன்..எந்த நன்றி விசுவாசமும் இல்லாம பேசி இருக்கிறீங்க பிரதர் தப்பில்லையா? எங்கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்..?
பருத்திவீரன் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்போதெல்லாம் சரி நமக்கெதுக்கு அவங்களே பேசிக்குவாங்க. அவங்களே தீத்துக்குவாங்க. அப்படின்னு தான் நான் இருந்தேன். ஆனா இந்த முறை அப்டி இருக்க முடியல.. ரொம்ப கஷ்டமா இருக்கு
அண்ணன் இந்த படத்துக்காக எவ்ளோ உழைச்சிருக்கார்… எவ்ளோ கஷ்டப்பட்டுருக்கார் னு எனக்கு தான் தெரியும். ஏன்னா கால்வாசி படம் நடக்கும்போதே நீங்க கைய விரிச்சிட்டீங்க என்னால தயாரிக்க முடியாது.. பணம் இல்ல அப்படின்னு… சகோதரர் சூர்யா வந்து படத்தை நீங்களே வச்சுக்கோங்க அமீர் அண்ணா” அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டார். அதுக்குப்பிறகு அந்த படத்தை முடிக்கிறதுக்கு ஒவ்வொரு நாளும் அமீர் அண்ணனோட சொந்தக்காரங்க, நண்பர்கள், இப்படி ஒவ்வொருத்தர்கிட்டயும் அவர் சொல்லச்சொல்ல போய் ஒரு லட்சம். ஐம்பதாயிரம், ரெண்டு லட்சம் இப்டி வாங்கிட்டு வந்தவன் நான். இது இல்லாம தம்பி சசி கூட கொஞ்சம் பணம் கொடுத்திருக்கான் பிரதர் அந்த படத்துக்கு..
Almost அம்பது, அறுபது பேர் சேர்ந்து காசு கொடுத்து தான் அந்த படத்தை எடுத்து முடிச்சோம்…ஆனா கடைசில நீங்க வந்து அந்த தயாரிப்பாளர் சட்டையை போட்டுக்கிட்டிங்க… உண்மையிலேயே யார் தயாரிப்பாளர்.? சொல்லுங்க.! தயாரிப்பாளர் பதவிய அண்ணன் அமீர் உங்களுக்கு விட்டுக்கொடுத்தார் என இயக்குநர் சமுத்திரகனி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.