சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ராத்தோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல் ஆணையராக இருந்து வந்த சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் . இதேபோல் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக ராஜீவ் குமாருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Also Read : தஞ்சை அருகே 22 கோடி மதிப்பிலான பழங்கால சாமி சிலைகள் மீட்பு..!!
சென்னை பெருநகர காவல் ஆணையர் பதவி பறிக்கப்பட்ட சந்தீப் ராய் ராத்தோர் காவலர் பயிற்சி பள்ளி இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் நாளுக்கு நாள் கொலை உள்பட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் காவல் துறையில் உயரிய பதவியில் இருந்த சில முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உயர் பதவி வகிக்கும் முக்கிய அதிகாரிகளுக்கு கொடுத்தால் பொறுப்பு கொடுத்ததும் இடம்மாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்கு பலன் கிடைக்குமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.