நெல்லையில் ஒருதலை காதலால் படுகொலை செய்யப்பட்ட சந்தியாவின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார் .
இதுகுறித்து திருமாவளவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
நெல்லையில் இளம்பெண் சந்தியா படுகொலையைக் கண்டித்து கரிசல்குளத்தைச் சார்ந்த பொதுமக்கள் மற்றும் விசிக முன்னணி பொறுப்பாளர்கள் முத்துவளவன், எம்.சி.சேகர், சஜன்பராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படுகொலையான சந்தியாவின் குடும்பத்தினருக்கு ரூ.கோடி இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுகிறோம் என திருமாவளவன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.