சரவணபவன் ராஜகோபால் வழக்கு,Dosa King என்ற பெயரில் இந்தியில் படமாக உள்ளது. இந்த திரைப்படத்தை ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கவுள்ளார்.
நடிகர் சூர்யா நடித்து பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜெய்பீம். பழங்குடியின இருளர் மக்களின் வாழ்வை மையமாக வைத்தும், செங்கேனி என்ற பெண்ணின் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவத்தை கதையம்சமாக வைத்து படத்தை இயக்கினார் இயக்குனர் ஞானவேல். இந்த திரைப்படம் தமிழகம் மட்டுமல்ல்லாது உலகம் முழுவதும் பெரிதும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், அசத்தல் திரைக்கதை, இயக்கத்தின்மூலம் இருளர் மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய இயக்குனர் ஞானவேல் தற்போது சரவணபவன் ராஜகோபால் வழக்கை மையமாக வைத்து இந்தியில் திரைப்படம் இயக்கவுள்ளார். இந்தி திரைப்படத்தை இயக்குவதன் மூலம் இந்தி திரையுலகிற்கு முதல்முறையாக அடியெடுத்து ஞானவேல் வைக்கிறார்.