Site icon ITamilTv

”தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா..” வாழ்த்து தெரிவித்த சசிகலா!!

Spread the love

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 9-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 9 நாட்களாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்றிரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிசுற்று போட்டியில் 88.17மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.மேலும் உலகச் சாம்பியன்ஷிப் தடகள வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

இந்த நிலையில் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவிற்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

ஹங்கேரியில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அவர்கள் தங்கம் வென்று அசத்தியிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், உலகச் சாம்பியன்ஷிப் தடகள வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தி நம் நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ள தடகள வீரர் நீரஜ் சோப்ரா அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அவர்கள் தனது கடின உழைப்பாலும், விடா முயற்சியாலும் மென்மேலும் பல அரிய சாதனைகளை நிகழ்த்தி காட்டிட எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரியவேண்டும் என மனதார வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version