ITamilTv

விண்வெளிக்குச் செல்லும் முதல் சவுதி வீராங்கனை… ரயானா பர்ணாவி..!

Spread the love

சவுதி அரேபியா, முதல் முறையாக ரயானா பர்ணாவி (rayyana barnawi) என்ற பெண் வீராங்கனை ஒருவரை இந்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

முன்னதாக, சவுதி அரேபியா AX-2 விண்வெளி பயணம் என்ற திட்டத்தின் கீழ் தனது விண்வெளி ஆராய்ச்சியாளர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்ப இருக்கிறது. அதன்படி, 2023ஆம் ஆண்டில் மேற்கொள்ள இருக்கும் இந்த விண்வெளிப் பயணத்தில் ரயானா பர்ணாவி (rayyana barnawi) என்ற விண்வெளி வீராங்கனையும் இடம்பெற இருக்கிறார் என அறிவித்துள்ளது.

மேலும், இவருடன் சவுதியின் விண்வெளி வீரரான அலி அல் கர்னியும் விண்வெளிக்குச் செல்ல இருக்கிறார் எனவும், இவர்கள் பயணிக்க உள்ள விண்கலம் அமெரிக்காவில் இருந்து ஏவப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

rayyana barnawi

முன்னதாக, சவுதி அரேபியா பெண்களுக்கான பல அடிப்படை உரிமைகளை மறுத்துவந்த நிலையில், தற்போது படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், ரயானா பர்ணாவி என்ற பெண் வீராங்கனை விண்வெளிக்கு அனுப்ப இருப்பது இதுவே முதல் முறையாகும்.

மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் அண்டை நாடான ஐக்கிய அரபு அமீரகம், விண்வெளி வீரர் ஒருவரை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பியது. இதனால், அரபு நாடுகளில் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், நெயாடி சுல்தான் ஆஃப் ஸ்பேஸ் என்று அழைக்கப்படும் 41 வயதான விண்வெளி வீரர் முதல் முறையாக விண்வெளிக்குச் சென்றவர் ஆவார். இவர் தற்போது மீண்டும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் மீண்டும் விண்வெளிக்குச் செல்கிறார்.

இதன் மூலம் ஆறு மாத காலத்தை விண்வெளியில் கழித்த முதல் அரபு நாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இந்நிலையில், அமீரகத்தைத் தொடர்ந்து சவுதியும் விண்வெளிக்கு தனது வீரர் வீராங்கனையை அனுப்ப இருக்கிறது.


Spread the love
Exit mobile version