ITamilTv

1,747 அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பணிநீக்கம்..? அதிர்ச்சி தகவல்..!

Spread the love

இதுவரை டெட் தேர்வில் தேர்ச்சியடையாமல் உள்ள 1,747 அரசுப்பள்ளி ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை பணிநீக்கம் (dismiss) செய்ய முடிவு செய்துள்ளதாக் தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதன்படி, தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு 2 தாள்களாக நடத்தப்படுகிறது.

dismiss

முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2 ஆம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணியமர்த்தப்படுவார்கள். தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது.

இதனையடுத்து, புதிதாக ஆசிரியர் பணியில் சேருபவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதைப்போல, ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் டெட் TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.

இதற்காக ஏற்கெனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு மீண்டும் டெட் தேர்வெழுத அரசு சார்பில் அவகாசம் தரப்பட்டிருந்தது.

இந்த முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சிறுபான்மையின பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டும் டெட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கால அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டும் டெட் தேர்வில் இன்னும் தேர்ச்சி பெறாமல் இருக்கும் 1,747 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி டெட் தேர்வில் இன்னும் தேர்ச்சி பெறாதவர்களை பணிநீக்கம் (dismiss) செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

 


Spread the love
Exit mobile version