கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி வகுப்பறையில் மாணவர் ஒருவர் மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த பளுகல் பகுதியில் அமைந்துள்ளது அரசு மேல்நிலை பள்ளி.
இந்த பள்ளியில் தற்போது வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த 2-ம் தேதி செவ்வாய் கிழமை வகுப்பறையில் வைத்து தன்னுடன் அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவருக்கு நண்பர்களின் வற்புறுத்தல் பேரில் தாலி கட்டியுள்ளார்.
மாணவன் மாணவிக்கு தாலி கட்டும் போது சக மாணவர்கள் காகிதங்களை கிழிந்து அவர்கள் மீது மலர்கள் போல தூவி வாழ்த்தியும் உள்ளனர். இதை உடன் இருந்த மாணவர் ஒருவர் செல்போணில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலாகி வரும் நிலையில், மாணவியின் தந்தை ஜஸ்டின் சம்பவம் குறித்து களியக்காவிளை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி செல்லும் மாணவ மாணவியர்களின் இதுபோன்ற செயல் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்வி துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.