டெல்லியில் சட்டவிரோதமாக அடித்தளத்தில் இயங்கி வந்த 11 பயிற்சி மையங்களுக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அங்கு இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . இதில் ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் புகுந்த மழை வெள்ள நீரில் சிக்கி 3 மாணவர்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் .
அடித்தளத்தில் உள்ள நூலகத்தில் இருந்தபோது வெள்ளத்தில் சிக்கிய மாணவர்கள் வெளிவர முடியாமல் மூழ்கியதில் . 2 மாணவியர் மற்றும் ஒரு மாணவர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் டெல்லி கரோல் பாக் பகுதியில் தனியார் IAS பயிற்சி மைய கட்டடத்தின் அடித்தளத்தில் மழை வெள்ளம் புகுந்து 3 மாணவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அதே போல் சட்டவிரோதமாக அடித்தளத்தில் இயங்கி வந்த 11 பயிற்சி மையங்களுக்கு டெல்லி மாநகராட்சி நிர்வாகம் சீல் வைத்துள்ளது அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.