“நான் தரையில் பேசியதை ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் திரையில் பேசியுள்ளது” – சீமான் பாராட்டு

ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் மிரளவைக்கும் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் X படத்தை நாம் தமிழகர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெகுவாக பாராட்டி உள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ஜிகர்தண்டா டபுள் X . தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இப்படம் கோலாகலமாக வெளியானது.

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகிவரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகமே பாராட்டியது . அந்தவகையில் தற்போது இப்படத்தை நாம் தமிழகர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெகுவாக பாராட்டி உள்ளார்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸை வெறும் படம் என்று கூறிவிட முடியாது, நம் அனைவருக்குமான பாடம். நான் தரையில் பேசுவதை தம்பிகள் திரையில் நேர்த்தியாக மொழிப் பெயர்த்துள்ளதைக் கண்டபோது, இப்படம் என் இதயத்திற்கு நெருக்கமாக நேரடித் தொடர்பினை ஏற்படுத்திவிட்டது.

பழங்குடி மக்களின் வாழ்வியலையும் அவர்களின் உரிமைப் போராட்டத்தையும் பேசும் இப்படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து ஆதரவு தர வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

Total
0
Shares
Related Posts