மீண்டும் ஒருமுறை மோடியைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தால் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும் என்று சீமான்(Seeman) விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு மற்றும் வரும் 2024 ஆம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து மதுரை_மேற்கு தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அடுத்த முறை மோடி பிரதமராக வாய்ப்பு உள்ளதா என்ற செய்தியாளர் கேள்விக்கு..இந்தியாவின் தலைசிறந்த பிரதமர் வி.பி,சிங் மட்டும் தான். 2ஆண்டுகள் ஆட்சி செய்தார் அவர்க்கு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அடுத்து வந்த நேரு இந்தியாவின் பிரதமாக இருந்த போது 16 ஆண்டுகள் இந்த நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர். தி கிரேட் மேன் என்று புகழ்ந்து பேசினார்.இவர்களைத் தவிர மற்றவர் அயோக்கிய பசங்கள்.. என்று விமர்சித்தார்.
மேலும் இந்தியாவில் கொடுமையான ஆட்சி மோடி அவர்களுடையது தான்..,”ஊர் ஊராகச் சுற்றித் திரிபவர்களுக்கு நாடோடி என்றும் பெயர் வைக்கலாம்..மோடி என்று பெயர் வைக்கலாம்..மீண்டும் ஒருமுறை மோடியைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்தால் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும்; இந்தியாவில் யாரும் வாழ முடியாது எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.