”அது என்னடா பாவம் பண்ணுச்சு!”.. மனைவியுடன் தகராறு..பல்லியை கடித்து தின்ற கணவன்!

மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் சுவற்றில் இருந்த பல்லியை பிடித்து அடித்து தின்ற கணவனின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் (selam)மாவட்டத்தில் ஆத்தூர் புதுக்கொத்தம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவருக்கும் இவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு முருகேசனுக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் நீடித்துக் கொண்டே தகராக மாறிய நிலையில் கடும் கோபத்திற்கு ஆளான முருகேசன் என்ன செய்வது என தெரியாமல் திடீரென சுவற்றில் இருந்த பல்லியை பிடித்து அடித்து தின்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பல்லியை தின்ற முருகேசன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Total
0
Shares
Related Posts