பாங்காக்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் ஆசியாவின் சிறந்த ஜூனியர் தடகள வீரருக்கான விருதை தமிழ்நாட்டை சேர்ந்த செல்வபிரபு பெற்றுள்ளார் .
மதுரையை சேர்ந்த திருமாறன் என்பவரின் மகன் செல்வ பிரபு திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாமாண்டு படித்து வரும் இவர் . கியூபா நாட்டை சேர்ந்த யோண்ட்ரிஸ் என்பவரது பயிற்சியின் கீழ், தீவிர பயிற்சி மேற்கொண்டு சர்வதேச அளவிலான மும்முறை நீளம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்று பல சாதனைகளை படைத்து வருகிறார்.
அந்தவகையில் கிரீஸ் நாட்டின் வெனிசெலியா நகரில் அண்மையில் நடைபெற்ற கிராண்ட் பிக்ஸ் சர்வதேச போட்டியில், மும்முறை நீளம் தாண்டுதல் ஆடவர் பிரிவில் பங்கேற்ற செல்வ பிரபு 16.78 மீட்டர் நீளம் தாண்டி தங்கம் வென்று மகத்தான சாதனை படைத்தார்.
இந்நிலையில் ஏசியன் அத்தலட்டிக் அசோஷியன் சார்பில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள போட்டியில் மாபெரும் சாதனை செய்தமைக்காக, நடப்பாண்டிற்கான ஆசியாவின் சிறந்த ஆண்கள் தடகள விளையாட்டு வீரராக செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டார் .
இதையடுத்து ஜீலை 10 ஆம் தேதி நேற்று பாங்காக்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் இளம் தடகள வீரர் செல்வபிரபுவுக்கு விருது வழங்கப்பட்டது .
தாய்நாட்டிற்கும் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்ந்த இந்த இளம் காளைக்கு நாட்டுமக்கள் ,அரசியல் தலைவர்கள் ,திரை பிரபலங்கள் என பலரும் பாராட்டுக்களையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் .