அண்ணாமலை நேற்று முளைத்த காளான் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கடுமையாக விமர்சித்துள்ளார் .
சத்யமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை கூறியதாவது :
மகாராஷ்டிராவில் மோடி அரசால் பல கோடி மதிப்பில் நிறுவப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை 6 மாதங்கள் கூட தாக்குபிடிக்கவில்லை. உடைந்து நொறுங்கிவிட்டது. இதுதான் மோடி அரசின் நிலை. ஆனால் கன்னியாகுமரியில் வானுயர நிற்கும் 133 அடி திருவள்ளுவர் சிலை சுனாமியே வந்தாலும் உறுதியாக நிற்கும்.
Also Read : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57வது முறையாக நீட்டிப்பு..!!
தமிழ்நாட்டில் இப்படி எத்தனையோ சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. நேற்று முளைத்த காளான் அண்ணாமலை, இந்திராகாந்தி குறித்து விமர்சிக்க அவருக்கு அருகதை இல்லை.
முதலில் அண்ணாமலை வாஜ்பாய் குறித்து படித்து தெரிந்துக் கொள்ள வேண்டும். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி உள்ளிட்டோரை வாஜ்பாய் புகழ்ந்து பேசியுள்ளார் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.