BREAKING | டாஸ்மாக் – இரவு 10 வரை மட்டும் இயக்கம்

அனைத்து டாஸ்மாக் (Tasmac )கடைகளும் நண்பகல் 12 முதல் இரவு 10 வரை மட்டுமே இயங்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி(senthil balaji)தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரு மதுபாட்டிலுக்கு டாஸ்மாக்(Tasmac) கடைகளில் கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது என புகார் எழுந்ததை அடுத்து, டாஸ்மாக் கடைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, “மதுபான கடைகள் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூட வேண்டும். டாஸ்மாக்(Tasmac) கடைகளில் விலை பட்டியல் வைக்கப்படுவதை மாவட்ட மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

டாஸ்மாக் கடைகளில் பதிவேடுகளை தினசரி முறையாக பராமரிக்க வேண்டும்.மேலும் மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது.

கூடுதல் விலைக்கு மது விற்றால் சம்பந்தப்பட்ட கடை ஊழியரிடம் அபராதம் வசூலிக்க வேண்டும்.என அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி(senthil balaji)  அறிவுறுத்தியுள்ளார்.

    Total
    0
    Shares
    Related Posts