யோகி ஆதித்யநாத்துக்கு மாயாவதி அறிவுரை :
புல்டோசர் அரசியலை நிறுத்திவிட்டு வன விலங்குகளை கட்டுப்படுத்துங்கள்.
யோகி ஆதித்யநாத் அரசு “புல்டோசர் அரசியலை” செய்வதை விட்டுவிட்டு, வன விலங்குகள் மனித வாழ்விடத்திற்குள் நுழைந்து மக்களைத் தாக்குவதைச் சமாளிக்க ஒரு உத்தியை உருவாக்க வேண்டும் – பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி.
அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு
இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
சத்தியஞான சபை – உயர்நீதிமன்றம் கேள்வி.
வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை வழக்கில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
செப்.12-க்குள் கடலூர் ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சத்தியஞான சபைக்கு சொந்தமான 34 ஏக்கர் நிலம் யார் பெயரில் உள்ளது? அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு எதிரான வழக்குகள் செப்.12-க்கு ஒத்திவைப்பு
தமிழக மீனவர்கள் 8 பேர் தலா ₹18,000 அபராதம்.
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 28ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.
விடுதலையான 5 பேர் உட்பட 8 மீனவர்களுக்கும் இந்திய மதிப்பில் தலா ₹18,000 அபராதம் விதித்தது இலங்கை மன்னார் நீதிமன்றம்.
ரூ.18 ஆயிரம் அபராதம் செலுத்த தவறினால், 6 மாதம் சிறைக்காவல் தண்டனை வழங்க இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு.
நடராஜர் கோயில் வருவாயை தாக்கல் செய்ய உத்தரவு.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2014-24 வரையிலான வருமானம், செலவு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என பொது தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
விசாரணையை செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
கோயில் வருவாயை தாக்கல் செய்யக் கோரி இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்த உத்தரவில் ஆணை.
ஜாபர் சாதிக்கின் ரூ.55.30 கோடி சொத்துகள் முடக்கம்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக்கின் ₹55.30 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்.
ஹோட்டல், சொகுசு பங்களா மற்றும் ஜாகுவார், மெர்சிடிஸ் போன்ற 7 வகை கார்களை முடக்கியது அமலாக்கத்துறை.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை.
தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகள்.
தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகளை திறப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு.
விழுப்புரம் நங்கிளி கொண்டான், தி.மலை கரியமங்கலம், கிருஷ்ணகிரி நாகம்பட்டியில் சுங்கச் சாவடிகள் திறப்பு.
கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர கட்டணமாக ரூ.55 முதல் ரூ.370 வரையும் நங்கிளி கொண்டான், நாகம்பட்டியில் ஒரு முறை சென்று வர கட்டணமாக ரூ.60 முதல் ரூ.400 வரையும் நிர்ணயம்.
தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு
அரசுப்பள்ளி, கல்லூரிகளில் நாப்கின் இயந்திரங்கள் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
செப்டம்பர் 12ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.
செப்டம்பர் 17-ல் மிலாதுநபி கொண்டாட்டம்.
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பிறை| தெரியாததால் செப்டம்பர் 17-ல் மிலாது நபி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பு.
செப்.6ம் தேதி, முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது – தலைமை ஹாஜி.