ITamilTv

நடந்து முடிந்த சின்னத்திரை பிரபலத்தின் திருமண நிச்சயதார்த்தம் – புகைப்படங்கள் வைரல்

Spread the love

சின்னத்திரை நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

சீரியல்களில் ஒன்றாக நடிக்கும் நடிகர் – நடிகைகள் பலர் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமாகி உள்ளது. அந்த வரிசையில் சின்னத்திரை நடிகர் அரவிஷ் தனது காதலியான ஹரிகாவை திருமணம் செய்து கொள்ள உள்ளார்.

ஒரு டான்சராக ‘மானாட மயிலாட’ போன்ற நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய அரவிஷ், சுந்தரி, இலக்கியா, போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவரும், சன் டிவியில் ஒளிபரப்பான ‘திருமகள்’ சீரியலில் நடித்து புகழ்பெற்ற ஹரிகா சாதுவும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் நிலையில், இந்த ஜோடிகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

இதில் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை ஹரிகா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

இதனைப் பார்த்த அவர்களது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Spread the love
Exit mobile version