சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகி உள்ளது.
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயர் எடுத்த ஷங்கர் அவர்களின் சிஷ்யனான அட்லீயின் இயக்கத்தில் பாலிவுட் பாஷா ஷாருக்கானின் மிரட்டலான நடிப்பில் உருவான திரைப்படம் ஜவான் .
ரெட் சில்லிஸ் நிறுவனத்தின் தாராள பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, யோகி பாபு , தீபிகா படுகோனே என பல உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் மொத்தம் 13 பாடல்கள் உள்ளதாக கூறப்படுகிறது .சில நாட்களுக்கு முன் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்று இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகியுள்ளது .
ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்து வந்த ஜவான் படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படம் வேற லெவெலில் இருப்பதாக பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர் .