ITamilTv

INDvSL : சங்கக்காரா – ஜெயவர்தனே படைத்த சாதனை! முறியடித்த தசுன் ஷணக்கா

Spread the love

இந்தியா – இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 206 ரன்கள் குவித்தது. இறுதி வரை போராடிய இந்திய அணி 190 ரன்கள் குவித்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இலங்கை அணி சிறப்பாக பேட்டிங் செய்தது, இந்திய பந்து வீச்சை மிக சுலபமாக எதிர்கொண்டு ரன் குவித்தது.

தொடக்க வீரர்கள் மென்டிஸ், நிசங்கா, மாற்றும் அசலங்கா, கேப்டன் ஷணக்கா ஆகியோரின் கூட்டு முயற்சியால் இலங்கை 200 கடந்து இலக்கு அமைத்து. குறிப்பாக அணியின் கேப்டன் ஷணக்காவின் அதிரடியான பேட்டிங்கால் அணி பலமான நிலையை எட்டியது. 5 வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷணக்கா – அசலங்காவுடன் பார்ட்னர்ஷிப் அமைக்க ஆட்டம் இலங்கை வசம் சென்றது.

shanaka

மொத்தமாக 22 பந்துகள் ஆடிய ஷணக்கா 6 சிக்சர், 2 பவுண்டரி என 56 ரன்கள் குவித்தார். வெறும் 20 பந்துகள் எதிரிக்கொண்டு அரைசதம் கடந்து இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச 20 ஓவர் போட்டியில் குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்த வீரர் என்ற பெயர் பெற்றார். இதற்கு முன்னதாக இலங்கை அணியின் ஜாம்பவான்களான ஜெயவர்தனே 21 பந்திலும், சங்கக்காரா 21 பந்துகளிலும் அரை சதம் கடந்ததே சாதனையாக இருந்தது.

மேலும் இறுதி ஓவரில் இந்திய அணி 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இறுதி ஓவரை வீசிய ஷணக்கா வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து அணியை வெற்றியடைய செய்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love
Exit mobile version