ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே சிட்னியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்துள்ளார்.
ஷேன் வார்ன் தன் மகன் ஜேக்சனுடன் 300 கிலோ எடை கொண்ட பைக்கில் மெல்போர்னில் நேற்று சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்தின்போது இருவரும், 15 மீட்டர் தூரம்வரை சாலையில் சறுக்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.
வெளிக்காயம் எதுவும் இல்லாததால், உடனே மருத்துவமனைக்குச் செல்லாமல் வீடு திரும்பியிருக்கிறார்கள். இந்நிலையில், இன்று உடலில் சில இடங்களில் வலி எடுத்ததால், உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஷேன் வார்னே, ஆஷஸ் தொடருக்கு கமெண்டிரி செய்யவுள்ள நிலையில், தற்போது விபத்தில் சிக்கியிருப்பதால் முதல் டெஸ்டில் அவர் கமெண்டிரி செய்வாரா என்பது தெரியவில்லை. ஆஷஸ் தொடர் டிசம்பர் 8ஆம் தேதி துவங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.