வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வருவதாகவும், புதிய அரசு அமைய ராணுவம் உதவும் என அந்நாட்டின் ராணுவ தலைமை தளபதி தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் உள்நாட்டு வன்முறை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு சென்ற நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளார்.
ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவே தற்போது போராட்டக் குழுவினரின் முக்கியமான கோரிக்கையாக இருந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இதுநாள் வரை வசித்து வந்த பிரதமர் இல்லத்தை விட்டு உடனே வெளியேறினார்.
இதையடுத்து வங்கதேசத்தின் முழுப் பொறுப்பையும் ராணுவம் ஏற்றுக்கொள்வதாகவும் மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் ராணுவம் கட்டாயம் நிறைவேற்றும் எனவும் அந்நாட்டின் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
புதிய அரசு அமைய ராணுவம் உதவும் என்றும் அது வரை வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.