Shock In Midair : விமானத்தில் ரத்தம் கக்கி இறந்த நபர்… அலறிய பயணிகள்!!

Shock In Midair
Shock In Midair
Spread the love

தாய்லாந்தில், நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தினுள் பயணி ஒருவர் திடீரென ரத்தம் கக்கி வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை (Shock In Midair) ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஜெர்மனியின் முனிச் நகருக்கு லுப்தான்சா பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது.

அப்போது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த 63 வயது நிரம்பிய பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவருக்கு கடுமையாக மூச்சு வாங்கியது.

இதையும் படிங்க : திமுக-வின் நிர்வாகக் குளறுபடிகள்.. பொதுமக்கள் அவதி.. மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் – அ.மலை எச்சரிக்கை!

அதையடுத்து சிறிது நேரத்திலேயே அந்த நபர் ரத்த வாந்தி எடுத்தார். அவரது மூக்கில் இருந்தும் ரத்தம் கொட்டியது. தொடர்ந்து, நிலைமை மோசமாகி அவர் மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த அவரது மனைவி கதறி அழுதார்.

விமானத்தில் பயணித்த சக பயணிகளும் பயத்தில் கூச்சலிட்டனர். அதையடுத்து விமான பணியாளர்கள் மற்றும் விமானத்தில் இருந்த டாக்டர் ஆகியோர் இணைந்து அந்த பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அவரது சுவாசத்தை மீட்பதற்காக சி.பி.ஆர். சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தீவிர முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

மனைவியின் கண் முன்னே அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், பயணி உயிரிழந்ததை பைலட் அறிவித்தபோது விமானம் நிசப்தமாக இருந்தது.

இதையும் படிங்க : Mouth Cancer : வாய்வழி உடலுறவு.. வாய் புற்று நோய்.. எச்சரிக்கை!!

உயிரிழந்தவரின் உடல் விமானத்தின் கேலரிக்குள் வைக்கப்பட்டு, விமானம் தாய்லாந்துக்கு திருப்பிவிடப்பட்டது.

அந்த விமானம் நேற்று காலையில் தாய்லாந்தில் தரையிறங்கியது. பின்னர் உரிய நடைமுறைகளுக்கு பிறகு, உயிரிழந்தவரின் உடல் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் கூறியதாவது..

விமானத்தில் நடந்த இந்த மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிர்ச்சியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை (Shock In Midair).

இதையும் படிங்க : கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட MyV3 ADS நிறுவனத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது!

அந்த பயணி விமானத்தில் ஏறும்போதே அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. குளிரிலும் அவருக்கு வியர்த்து கொட்டியது. வேகமாக மூச்சு விட்டார்.

அவரது நிலை இவ்வளவு மோசமாக இருந்தும் விமானி ஏன் விமானத்தை கிளப்பினார் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளனர்.


Spread the love
Related Posts