Site icon ITamilTv

chile wild fire – 112 பேர் உடல் கருகி பலி! பதற வைக்கும் வீடியோ!

chile wild fire

chile wild fire - 112 பேர் உடல் கருகி பலி! பதற வைக்கும் வீடியோ!

Spread the love

chile wild fire: அமெரிக்காவின் சிலி பகுதியில், பெரும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 112 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

சிலியின் மத்திய பகுதியில் இருக்கும் வனப்பகுதியில் நேற்று திடீரென அதி பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அங்கு உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளுக்கு மேல் தீ பற்றி எரிந்துள்ளது.

இந்த தீ விபத்தில் அங்கிருந்த 1000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசமானது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் 51 பேர் உடல் கருதி உயிரிழந்த நிலையில், பலர் படுமோசமான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் பலர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தீ விபத்தில் இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சிலி காட்டு தீ – பதற வைக்கும் வீடியோ

அந்த பகுதி முழுவதும் புகை மண்டலம் போல் காட்சியளித்துள்ள நிலையில் தீ பரவாமல் இருக்க விமானம் மூலம் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் அந்நாட்டு தீ அணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகிறனர்.

மேலும், தீ விபத்து ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அவசரமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சிலி காட்டுத்தீயில் ( chile wild fire) இருந்து அடர்த்தியான சாம்பல் புகை கடலோர நகரங்களை மூடியது.

மத்திய பகுதிகளான வினா டெல் மார் மற்றும் வால்பரைசோவில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய கட்டாயப்படுத்தினர்.

இந்த திடீர் தீவிபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : kilampakkam bus station: விரைவில் மலிவு விலை உணவகம் -சேகர்பாபு

முதற்கட்ட விசாரணையில் கடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றின் வேகம் காரணமாக மரக்கிளைகளுக்கு இடையிலான உராய்வுகளே இந்த காட்டுத் தீக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காட்டுத் தீ பரவல் குறைவு என்றாலும் உயிரிழப்பு அதிகம் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் கரோலினா தோஹா தெரிவித்துள்ளார். அங்கு, அவசர நிலை பிரகடனப்படுத்தி உள்ளது.


Spread the love
Exit mobile version