ஹரியானாவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் உதவியுடன் விமானப் பணிப் பெண் ஒருவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் தான் மயக்க நிலையில் இருந்த போது தன்னை மருத்துவமனை ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.
Also Read : பாமக உட்கட்சி விவகாரம் – ஜி.கே.மணி பரபரப்பு பேட்டி..!!
வெண்டிலேட்டர் இருந்ததால் என்னால் பேச முடியவில்லை என்றும் லேசான மயக்கத்திலும் இருந்ததால் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என கண்ணீருடன் தெரிவித்த அப்பெண் சம்பவத்தின்போது என்னைச் சுற்றி செவிலியர்களும் இருந்தனர் என புகாரில் கூறியுள்ளார்.
இதையடுத்து பெண் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.