நடிகர் சிவகார்த்திகேயன் ( sivakarthikeyan ) நடிப்பில் இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி வெளியான திரைப்படம் பிரின்ஸ்.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் உக்கரைன் நாட்டு நாயகி மரியா என்பவர் நடித்திருந்தார்.இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார்.
பிரின்ஸ் திரைப்படம் தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்ப்பில் இருந்த பிரின்ஸ் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றதோடு வசூல் வேட்டையும் நடத்தியுள்ளது.ரிலீஸ் ஆகி பத்து நாள் முடிவில் படம் உலகம் முழுவதும் 45 கோடி ரூபாய் இதுவரை வசூல் செய்துள்ளது.