இன்று மாலை வெளியாகிறது “SK21 Update”

SK21 Update
SK21 Update
Spread the love

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள ‘SK21’ படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழு (SK21 Update) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி இந்த படத்தில் எஸ்.கே மற்றும் சாய் பல்லவியுடன் சேர்ந்து ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு நீண்ட நாட்களாக ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் 30 வினாடிகள் கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு இன்று மாலை 5 மனைக்கு SK21 படத்தின் சிறப்பான தரமான (SK21 Update) அப்டேட் ஒன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் அந்த முக்கிய அப்டேட் என்னவாக இருக்கும் என்பதை காண ரசிகர்கள் செம ஆவலாக உள்ளனர்.

சிவாவின் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான அயலான் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது .

பிரமாண்ட பொருட்செலவில் கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படம் நெடு நீண்ட நாட்களாக உருவாக்கப்பட்டு வந்தது.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன், பால சரவணன், இஷா கோபிகர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ள இப்படத்தின் பாடல்களும் வேற லெவலில் ஹிட் ஆனாது.

இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில் படத்தின் கலெக்சனும் தாறுமாறாக இருந்தது .

Also Read : https://itamiltv.com/the-governor-is-eligible-for-the-post-of-rss-policy-secretary/

வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்படமாக உருவெடுத்துள்ள அயலான் திரைப்படம் சிவகார்த்திகேயனின் வெற்றி படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் ராஜ்குமார் இயக்கத்தில் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள எஸ்.கே 21 படமும் சிவகார்த்திகேயனுக்கு வெற்றி படமாக அமையுமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.


Spread the love
Related Posts