உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது .
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை 29 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் புனே மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் 30 வது லீக் போட்டியில் இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகள் மல்லுக்கட்ட உள்ளது.
நடப்பு உலககோப்பை தொடரில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி 2 ல் வெற்றியும் 3ல் தோல்வியடைந்தும் புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. அதேபோல் ஆப்கானிஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் 2 ல் வெற்றியும் 3ல் தோல்வியடைந்தும் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
இந்த இரு அணிகளும் இரண்டில் வெற்றி மூன்றில் தோல்வியடைந்துள்ளதால் இன்றைய ஆட்டம் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் எந்தவித சதேகமும் இல்லை.
இந்நிலையில் இன்று பிற்பகல் நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.