புகைப்பிடிக்கும் பழக்கத்தால் ஆண்டிற்கு 80 லட்சம் மக்கள் உயிரிழந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நவீன தொழில்நுட்பங்கள் ஆளும் இன்றைய காலத்தில் போதை பொருட்களின் ஆதிக்கமும் அசுரர் வளர்ச்சி கண்டு வருகிறது புது புது பெயர்களில் இளசுகளை கவர்ந்திழுக்கும் போதைப்பொருட்கள் அவர்களை தப்பான பாதைகளுக்கு அழைத்து செல்வதுடன் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதில் புகைப்பிடிப்பதால் மட்டும் ஆண்டுதோறும் ஏராளமான மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் தற்போது இதுகுறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
Also Read : தடையை மீறி போராட்டம் நடத்த வந்த சீமான் – கடமையை செய்த காவல்துறை..!!
ஒவ்வொரு சிகரெட்டை புகைக்கும் போதும் சராசரியாக ஒரு ஆண் தன் வாழ்நாளில் 17 நிமிடங்களையும் ஒரு பெண் 20 நிமிடங்களையும் இழப்பதாக லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச் தரும் தகவல் வெளியாகி உள்ளது.
சிகரெட் புகைப்பதால் ஆண்டிற்கு 80 லட்சம் மக்கள் உயிரிழப்பதாகவும் . இதுவரை கண்டிராத மிகப்பெரிய சுகாதார அச்சுறுத்தலாக புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது